இலங்கைக்கான நோர்வே தூதுவர் திரினா யுரான்லி எஸ்கடெல் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை பேணுவதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்துள்ளனர்.
அத்துடன், கொரோனா அச்சுறுத்தலில் இராஜதந்திர உதவிகளின் முக்கியத்துவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தூதரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இச்சந்தின்போது டாக்டர் ஹர்ஷா டி சில்வா, எரான் விக்ரமரத்ன, நிரோஷன் பெரேரா மற்றும் டாக்டர் ரோஹன் பல்லேவத்த ஆகியோர் கலந்து கொண்டனர்.