கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பின்பற்றாது முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியினை பேணால் செயற்பட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்களுக்காக 2823 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 2751 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.