நாட்டில் நாளொன்றில் அதிகளவான கொவிட் நோயாளர்கள் நேற்று குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியிருந்தனர்.
நேற்றைய தினம் மாத்திரம் கொவிட்-19 தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 869 பேர் குணமடைந்தனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொவிட் 19 தொற்றலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது.