நாட்டில் மேலும் ஏழு கொவிட் 19 மரணங்கள் நேற்று பதிவாகின
இதன்படி நாட்டில் இதுவரை கொவிட் 19 என உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 297 ஆக உயர்வடைந்துள்ளன.
கொழும்பு 6 பகுதியை சேர்ந்த 86 வயதான ஆண் ஒருவர் இத்தேபான மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கடந்த 26 ஆம் திகதி உயிரிழந்தார்.
கொவிட்19 நியூமோனியா நிலை, நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் என்பன அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிட்டம்புவ பகுதியை சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 நியூமோனியா நிலையால் ஏற்பட்ட மாரடைப்பு, நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி – கல்லேல்ல பகுதியை சேர்ந்த 76 வயதான பெண் ஒருவர் இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
கொவிட்19 நியூமோனியா நிலை, மேசமடைந்த இதய நோய், குருதி விசமானமை அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 61 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொவிட் 19 தொற்றுறுதியானவராக கண்டறியப்பட்டார்.
அதன்பின்னர் அவர் முல்லேரியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நிலையால் இதயம் செயலிழந்தமையாகும்.
அதேநேரம், கொழும்பு சிறைச்சாலையில் இருந்த 61 வயதான ஆண் கைதி ஒருவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுறுதியானவராக கண்டறியப்பட்டார்.
பின்னர் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்தார்.
கொவிட்19 நியூமோனியா நிலை, மாரடைப்பு மேசமடைந்த நீரிழிவு அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு 6 பகுதியை சேர்ந்த 67 வயதான பெண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கடந்த 24 ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் என கொவிட் 19 நியூமோனியாவாகும்.
இதேவேளை, எந்தரமுல்ல பகுதியை சேர்ந்த 62 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்ட போது கடந்த 21 ஆம் திகதி உயிரிழந்தார்.
கொவிட்19 நியூமோனியா நிலை, சிறுநீரை நோய் பாதிப்பு என்பன அவரது மரணத்திற்கான காரணம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.