இன்றைய காலகட்டத்தில் பலரும் சந்திக்கும் பெரும் பிரச்சனையாகிவிட்டது உடல் பருமன்.
துரித உணவுகள், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை என பல காரணங்கள் உடற்பருமனை அதிகரித்து விடுகிறது, இதன் விளைவு எண்ணற்ற நோய்கள் வந்துவிடுகின்றன.
மிக குறிப்பாக உடல் எடை அதிகமாக இருந்தால் தாம்பத்திய வாழ்விலும் சிக்கல்கள் எழுகின்றன.
கர்ப்பம் தரிப்பதிலிருந்து குழந்தை பிறக்கும் வரை சவால் நிறைந்ததாகவே இருக்கிறது, உடல் பருமனான பெண்கள் கருத்தரிக்கும் போது சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கரு வளர்வதில் சிக்கல் என தொடங்கி குழந்தை பிறந்த பின்னரும் பல விதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும், இதனை எப்படி தடுப்பது, மருத்துவ ரீதியான தீர்வுகள் குறித்து விளக்குகிறார் மருத்துவர்,