அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் நான்காண்டுகால மக்கள் ஆதரவு விழுக்காட்டை விடவும் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் முந்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்று சில நாட்களே கடந்துள்ள நிலையில்,
ஜோ பைடனின் செயல்பாடுகளை ஆதரப்பிதாக 56 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். இன்னொரு நிறுவன கருத்துக்கணிப்பில் இது 63 சதவீதமாக உள்ளது.
ஆனால் 2017-ல் டொனால்டு டிரம்பின் செயல்பாடுகளுக்கு அப்போது மக்கள் அளித்த ஆதரவானது வெறும் 46 சதவீதம் மட்டுமே.
இருப்பினும், 2017 மார்ச் மாதம் வெளியாக கருத்துக்கணிப்பில் டொனால்டு டிரம்ப் 52 சதவீத மக்கள் ஆதரவை பெற்றிருந்தார்.
மட்டுமின்றி, 2020 ஏப்ரல் மாதம் டொனால்டு டிரம்பின் மக்கள் ஆதரவு உச்சம் பெற்று 52 சதவீதமாக இருந்ததாக தெரிய வந்துள்ளது.
அதாவது தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கிடைத்திருக்கும் மக்கள் ஆதரவை விடவும் 11 சதவீதம் குறைவு.
ஜோ பைடன் ஆட்சி பொறுப்புக்கு வந்த சில நாட்களில், டொனால்டு டிரம்ப் கொண்டுவந்த மிகவும் சர்ச்சைக்குரிய கொள்கைகள் சிலவற்றை ரத்து செய்துள்ளார்.
மட்டுமின்றி குறிப்பிடத்தக்க புதிய உத்தரவுகளையும் பிறப்பித்து மக்கள் ஆதரவை பெற்றுள்ளார்.