இந்திய மாநிலம் கேரளாவில் காதல் கணவனின் நடவடிக்கைகளில் மனமுடைந்த இரண்டு பிள்ளைகளின் தாயார் குளம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் குடும்பத்தினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட மனக்கவலையே காரணம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அம்பாடி பகுதியைச் சேர்ந்த பதீப் என்பவரின் மனைவி விஜயலட்சுமி என்பவரே நேற்று பகல் சுமார் 7.30 மணியளவில் குளம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டவர்.
அதிகாலையில் கோவிலுக்கு என கூறி வீட்டை விட்டு வெளியேறியவர், பின்னர் வீடு திரும்பாத நிலையில், சுமார் 7.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார்.
விஜயலட்சுமியை காணாமல், உறவினர்கள் சிலர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தேடியுள்ளனர்.
ஆனால், அப்பகுதியில் உள்ள ஆழமான குளம் ஒன்றின் அருகே அவரது ஸ்கூட்டர் மற்றும் காலணிகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், உரிய பரிசோதனையில் குளத்தில் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என்றே பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
கணவனின் நடவடிக்கைகளில் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார் விஜயலட்சுமி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில்,
திருமணத்திற்கு பின்னர் சில வழக்குகளில் சிக்கி, கணவர் கைதானதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடவடிக்கைகளில் மாற்றம் வரும் என கருதி இருவரும் பெங்களூரு சென்று அங்கே வசித்து வந்துள்ளனர்.
ஆனால் அவரது நடவடிக்கையில் எந்த மாறுதலும் இல்லை என தெரிய வந்த நிலையில், மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பியுள்ளனர்.
இதனிடையே, விஜயலட்சுமியின் கணவர் மீண்டும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டதும், மனமுடைந்து காணப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.