சுகாதார வல்லுனர்கள் எச்சரிகைகளுக்கு இடையில், இத்தாலி திங்கள்கிழமை முதல் நாட்டின் பெரும்பகுதி முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இத்தாலியில் வரும் திங்கட்கிழமை முதல் பெரும்பாலான பகுதிகளில் கோவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
சமீபத்திய கோவிட் -19 தரவுகளை மதிப்பாய்வு செய்த பின்னர், 11 பகுதிகளை ஆரஞ்சு நிறத்தில் இருந்து மஞ்சள் மண்டலங்கள் என மாற்றுவதாகவும், அங்குள்ள மக்களுக்கு பயணிக்க அதிக சுதந்திரம் அளிப்பதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், பகல் நேரத்தில் பார்கள் மற்றும் உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மொத்தத்தில், 16 பிராந்தியங்கள் மிகக் குறைந்த ஆபத்துள்ள மஞ்சள் மண்டலத்தில் இருக்கும், மேலும் பக்லியா, சார்டினியா, சிசிலி மற்றும் அம்ப்ரியா ஆகிய 4 பிராந்தியங்கள் ஆரஞ்சு மண்டலத்தில் இருக்கும் என தெறிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் எந்த பகுதியும் சிவப்பு மண்டலம் என வகைப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது பயணத்திலும் வணிகத்திலும் எந்த கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வராது.
பிரிட்டனில் முதன்முதலில் கண்டறியப்பட்ட மிகவும் பரவக்கூடிய உருமாறிய கொரோனா வைரஸின் வழக்குகள் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சில மருத்துவ வல்லுநர்கள் இது விதிகளை தளர்த்துவதற்கான நேரம் அல்ல என்று எச்சரித்துள்ளனர்.
மேலும் நாட்டின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் குறைந்து வரும் இந்த நிலையில், இந்த தளர்வுகள் மீண்டும் அதிக பாதிப்புகளையும் அதன் விளைவாக அதிக இறப்புகளையும் கொண்டுவரும் என சில மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.