இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 5 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது.
அந்த வகையில் இந்தியாவிலும், தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடகத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அதன்படி சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி போட்டதற்கு பின் அவர்களில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த மருத்துவர்களில் 2 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும், 3 பேர் கோவேக்சின் தடுப்பூசியும் போட்டுக் கொண்டவர்கள்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 5 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததன் காரணமாக அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதைக் கேட்டு மக்கள் சற்று அதிர்ச்சியில் உள்ளனர்.