தமிழகத்தில் மனைவியை பார்க்க முடியாத ஏக்கத்தில் இலங்கை தமிழர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எருமப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் மேத்யூஸ் (56). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2017-ம் ஆண்டு குடும்பத்துடன் இலங்கை சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து இவர் மட்டும் 2018-ம் ஆண்டு தமிழ்நாடு வந்து தனது வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்துள்ளார்.
இவரது மனைவியும், மகனும் இலங்கையில் உள்ளனர். அவர்களை பார்க்க இவரால் செல்ல முடியவில்லை.
மனைவி, மகனை பார்க்க முடியவில்லையே என மனவேதனை அடைந்த இவர் தனது வீட்டில் உள்ள விட்டத்தில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.