வெடிக்காத இரண்டாம் உலகப் போரின் குண்டுகள் மத்திய ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இரவோடு இரவாக ஆயிரக்கணக்கான மக்கள் நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஜேர்மனியில் உள்ள கோட்டிங்கன் நகரின் மையத்தில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் சந்தேகத்திற்கிடமான நான்கு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்தது தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த பகுதியில் உள்ளவர்களை உடனடியாக படகுகாப்பான பகுதிக்கு வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். வெளியேற்றும் முயற்சியின் போது தொற்றுநோய்க்கு எதிரான சில நடவடிக்கைகளை அதிகாரிகள் இடைநீக்கம் செய்தனர்.
பொலிஸ், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஜேர்மன் இராணுவம் அனைவரும் இணைந்து செயல்பட்டு, சனிக்கிழமையன்று இரவோடு இரவாக கோட்டிங்கனில் 8,000க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட 4 பொருட்களும் இரண்டாம் உலகப்போரின் பொது போடப்பட்ட வெடிகுண்டுகள் என உறுதி செய்யப்பட்டது. அவை ஒவ்வொன்றும் 500 கிலோ எடை கொண்டது என கூறப்படுகிறது. மேலும், அதில் ஒரு குண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது