பசறை – மடுல்சீமை காவல்துறை அதிகாரப் பிரிவிற்குட்பட்ட எக்கிரிய மற்றும் அதனை சூழவுள்ள சில கிராமங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தொிவித்துள்ளது.
ரிச்டர் மானியில் 2 மெக்னிரியூட் அளவில் நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னரும் இப்பிரதேசத்தில் இவ்வாறானதொரு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.எனினும், இது தொடர்பில் அச்சமடையத் தேவையில்லையென புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தொிவித்துள்ளது.



















