ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்திருப்பது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும், பாதுகாப்பானதாக கருதப்படும் தங்கத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது.
இந்த நிலையில், தங்கம் விலை இந்த வாரத்தை சரிவுடன் தொடங்கியது. நேற்றைய போலவே 3வது நாளாக தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து ரூ.36,232க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராம் தங்கம் ரூ.36 குறைந்து ரூ.4,529க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.10 குறைந்து ரூ.73.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.


















