ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு இதுவரை எவரும் அக்கட்சியிலிருந்து பெயர் குறிப்பிடப்படாத நிலையில், அந்த ஆசனத்திற்கு கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவே தகுதியானவர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிக்கின்றார்.
ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுடன் நடத்தப்பட்ட நேர்காணலில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல எதிர்கட்சித் தலைவர் பதவிக்கும் அவரே மிகவும் பொருத்தமானவராக அமைவார் என்றும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு மீண்டும் வருவாராக இருந்தால் அது அரசாங்கத்திற்கு சவாலாக அமையும் என்பதை ஏற்றுக்கொண்ட பிரதமர் மஹிந்த, அவர் நாடாளுமன்றத்திற்கு வருவதை தாம் ஏற்பதாகவும் குறிப்பிட்டார்.


















