தற்போது வெளிநாட்டில் உள்ள 129 இலங்கையர்களுக்கு சர்வதேச பொலிஸான இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இலங்கையர்களுக்கே இவ்வாறு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளில் பெரும்பான்மையானவர்கள் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துபாயில் இருப்பதாகவும் சிலர் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பதுங்கி இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, இந்த 129பேரில் 40பேரை தவிர்ந்த ஏனையோர்; இலங்கையில் நிதிக் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களாவர். 20பேர் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களாவர். இதற்கிடையில் 87 இலங்கையர்களுக்கு எதிராக நீல அறிவித்தல்களும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ள கிம்புலா எல குணாவை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அஜித் ரோஹன தெரிவிர்துள்ளார்.
அதேவேளை சர்வதேச காவல்துறையான இன்டர்போல் இலங்கை உட்பட்ட 194 நாடுகளில் செயற்பட்டு வருகிறது.



















