வெல்லம்பிட்டி பகுதியில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய சென்ற வேளையில், ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொள்ளை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் தொடர்பில் காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய காவற்துறையினர் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்ட போது சந்தேக நபர் தப்பிச்செல்ல முற்பட்டதால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள நேரிட்டதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உள்ளிட்ட 04 சந்தேக நபர்கள் கொள்ளை சம்பவம் போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்களில் ஒருவரை கைது செய்ய காவற்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட நடவடிக்கையே இது ஆகும்.


















