கிளிநொச்சிக்கு வந்து சேர்ந்த ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’ நடைபயண பேரணி இன்று காலை கிளிநொச்சி டிப்போ சந்தியில் காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பயணத்தில் பேரணி செல்லவுள்ள வழித்தடம் ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பரந்தன்,
இயக்கச்சி
,கொடிகாமம்,
பளை,
சாவகச்சேரி,
கைதடி,
நாவற்குழி,
அரியாலை,யாழ் நகரம்,
யாழ் பொதுநூலகம்,யாழ்/உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவிடம்.
யாழ் பல்கலைக்கழகம்.
நல்லூர் தியாகதீபம் நினைவிடம்.
கல்வியங்காடு.
கோப்பாய்.
நீர்வேலி.
வல்லைவெளி.
புறாபொறுக்கி சந்தி.
நெல்லியடி
வதிரிச்சந்தி
உடுப்பிட்டி,
வல்வெட்டித்துறை தீருவில்வெளி
வல்வெட்டித்துறை நகரம்
நெடியகாடு
பொலிகண்டி
தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றமைக்கு எதிராக பொத்துவிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி தமிழர் பகுதிகள் எங்கும் வெள்ளக்காடாக மக்கள் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில், இன்று யாழ்ப்பாணத்தில் பல ஆயிரக் கணக்கான மக்கள் ஒன்று குவிந்து தமிழர்களின் உரிமையை வென்று எடுக்கும் போராட்டத்தில் ஒற்றுமையை காட்டுவோம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.