கொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 1087 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து 22 விமானங்கள் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 08.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.