இந்தியாவில் மோட்டார் வாகன சட்டத்தில் விரைவில் புதிய திருத்தங்கள் கொண்டுவரவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மோட்டார் வாகன சட்டத்தில் அதிரடியான மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. அதன் அடிப்படியில் இனி ஓட்டுநர் உரிமம் பெரும் வழிமுறைகள் எளிமையாக்கப்படவுள்ளன.
இந்த புதிய திருத்தங்கள் அமுல்படுத்தப்படும் நிலையில், ஓட்டுநர் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள், பயிற்சி பெறுவோரை சோதனை செய்ய முடியாது. மேலும், லைசன்ஸ் பெறுவதற்காக அரசு அலுவலக அதிகாரிகளிடமும், இடைத்தரகர்களிடமும் சிக்கிக்கொள்ள வேண்டியதில்லை.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களில் முழுமையான பயிற்சி எடுத்திருந்தால் போதும், ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.
அத்தகைய மையங்களில் இருந்து ஓட்டுநர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த எந்தவொரு நபரும் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும்போது ஓட்டுநர் சோதனை தேவைக்கு விலக்கு அளிக்கப்படுவார்.
இந்த நடவடிக்கை, குடிமக்களுக்கு தரமான ஓட்டுநர் பயிற்சியை உறுதியளிக்க உதவும் என்றும், இது அவர்களின் செயல்திறனை மேம்படுத்துவதோடு சாலை விபத்துகளையும் குறைக்கும் என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.