ஜலதோஷம், இருமல், சளி போன்ற பிரச்சினைகள் வரும் போது மட்டுமே வெந்நீர் பருகும் பழக்கத்தை பலரும் கொண்டிருப்பார்கள்.
ஆனால் தினமும் வெந்நீர் குடித்தால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?
தினமும் காலையில் எழுந்தவுடன் வெந்நீர் பருகினால் மலச்சிக்கல் தீரும். இரவு தூங்குவதற்கு முன் பருகினால் புளித்த ஏப்பம், வாயுப்பிடிப்பு ஆகியவை நீங்கிவிடும்.
மேலும் வெந்நீர் பருகுவதால் உடலில் இருந்து வேர்வை அதிகமாக வெளியேறும். அதனுடன் சேர்ந்து உடலில் உள்ள நச்சுகளும் வெளியேறி உடல் சுத்தமாகும்.
வெந்நீர் பருகுவது முடி உதிர்வை குறைத்து முடியின் வளர்ச்சிக்கு உதவி செய்யும். தலையில் உள்ள பொடுகையும் கட்டுபடுத்தும்.
முக்கியமாக, வெந்நீர் பருகுவதால் உடலில் ரத்தஓட்டம் சீராகும்.
இதன் மூலம் நரம்பு மண்டலங்களின் செயல்பாடு மேம்படும். மேலும், வெந்நீர் அருந்துவது மூலம் உடலில் நச்சுகள் வெளியேறுவதால் வயதின் காரணமாக ஏற்படும் முதிர்ச்சி தள்ளிப்போடப்படும்.