தளபதி 65 திரைபடத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருக்கும் தகவல் உறுதியாகி விட்டதாக தற்போது கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது இந்த திரைப்படம் ஆன்லைன் தளத்தில் வெளியாகி இருக்கின்றது. இதனை தொடர்ந்து, நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கும் 65வது படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்க இருக்கிறார். மேலும், இதில் ஜானி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்ற இருக்கிறார். இந்த திரைப்படம் வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது.
இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பல்வேறு கதாநாயகிகளின் பெயர் கூறப்பட்டது. அதிலும் பூஜா ஹெக்டே தான் இந்த படத்தில் நடிக்க போவதாக உறுதியாக அனைவரும் கூறினர்.
ஆனால், தற்பொழுது இந்த திரைப்படத்தில் நடிகை கியாரா அத்வானி நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் மார்ச் மாதத்தில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.