83 வயதுடைய கைவிரலை வெட்டி தங்க மோதிரம் கொள்ளையிடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
பலாங்கொடை, எல்லெபொல பகுதியில் தனிமையில் வாழ்ந்து வந்த பெண்ணின் வீட்டிற்குள் நேற்று முன்தினம் இரவு நுழைந்த இருவர் இந்த கொடூர செயலை செய்தனர்.
மூதாட்டியின் விரலில் மோதிரம் இறுக்கமாக இருந்ததையடுத்து, விரலில் வெட்டுக்காயங்களை ஏற்படுத்தி, மோதிரத்தை கழற்றி சென்றுள்ளனர்.
காயமடைந்த மூதாட்டி பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



















