நேற்று 772 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 69,348 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புபட்டவர்கள். மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 65,347 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் 66 வைத்தியசாலைகளில் 5,591 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று, கொரோனாவிலிருந்து குமடைந்த 807 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 63,401 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று சந்தேகத்தில் 720 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.



















