கொவிட் ஒழிப்பிற்காக மேலும் மூன்று புதிய தடுப்பூசிகளை பெறுவதற்கான ஆய்வறிக்கை எதிர்பார்க்கப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வொன்றின் போது இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
ஆய்வறிக்கை கிடைத்ததன் பின்னர் நாட்டிற்கு பொருத்தமாக அமையும் வகையில் இருந்தால் மாத்திரம் இந்த தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்