இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 73,000 ஆக உயர்ந்துள்ளது. நேற்று (11) 942 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டது.
அதன்படி, நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 73,116 ஆக அதிகரித்துள்ளது.
பேலியகொட கோவிட் -19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக 939 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதே நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து நாடு திரும்பிய மூன்று பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 567 நபர்கள் குணமடைந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 66,211 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது, 6,526 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், தொற்று சந்தேகத்தில் 639 நபர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.



















