யாழ்ப்பாணத்தில் பேருந்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
வடமாகாணத்தில் நேற்று ஏழு பேருக்கு தொற்று உறுதியானது. அதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பேருந்து நடத்துனரும் ஒருவர்.
யாழ் நகர்- கச்சேரி- கொழும்புத்துறை வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து நடத்துனரான 53 வயதானவர் இரண்டு தினங்களின் முன்னர் நோய் வாய்ப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரில் கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதித்து பிசிஆர் சோதனை மேற்கொண்டதில், தொற்று உறுதியாகியுள்ளது.இவர் அரியாலை முள்ளி பகுதியை சேர்ந்தவர்.
இதேவேளை, மன்னாரில் நேற்று எருக்கலம்பிட்டியை சேர்ந்த கர்ப்பிணி ஒருவரும், ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.




















