பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று வட மாகாணத்திலும் பரவியுள்ளது. புதிய வகை வைரஸ் தொற்றுடன் வவுனியாவை சேர்ந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை இயக்குநர் டொக்ரர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்தார்.
பிரித்தானியாவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கையின் சில பாகங்களில்- கொழும்பு, அவிசாவளை, பியகம, வவுனியா பகுதிகளிலேயே இந்த வைரஸ் தொற்றுடன் நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஸ்வீடன், ஜெர்மனி, டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளிலும் பரவியதைப் போன்ற மற்றொரு புதிய மாறுபாடு இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
லீனேஜ் பி .1.258 என அடையாளம் காணப்பட்ட இந்த புதிய மாறுபாடு வைரஸ் மிகவும் பரவக்கூடியதாகக் கூறப்படுகிறது.
கொழும்பு, அவிசாவளை, பியகம, வவுனியா ஆகிய இடங்களில் அடையாளம காணப்பட்ட COVID-19 இன் B.1.1.7 மாறுபட்ட வைரஸ், இலங்கைக்குள் நுழைந்த மூன்றாவது மாறுபாடாகும்.
இன்று காலை 06 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேரத்தில் கொழும்பில் 273 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவிசாவளையில் 12 தொறறாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அந்த பகுதிகளில் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கம்பாஹா மாவட்டத்தில் பியகமவில் பாதிக்கப்பட்ட 10 பேர் கண்டறியப்பட்டனர், அதே நேரத்தில் வவுனியா மாவட்டத்தில் ஒரு பாதிக்கப்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டார்.


















