கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அச்சுவேலி பொதுச்சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் 4 வியாபாரிகளிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்மூலம், அச்சுவேலியை மையமாக கொண்ட மற்றொரு சந்தைக் கொத்தணி உருவாகலாமென்ற அபாய நிலை தோன்றியுள்ளது.
அச்சுவேலி சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் 35 வியாபாரிகளிற்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று இரவு வெளியாகின. இதில் 4 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
அச்சுவேலி பத்தமேனி, பூம்புகார் பகுதிகளை சேர்ந்தவர்களே தொற்றிற்குள்ளாகியுள்ளனர். தாயும், மகனும் மற்றும் கணவன், மனைவி ஆகிய நான்கு வியாபாரிகளே தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
இவர்கள் நால்வரும் ஒரே வரிசையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தும் நடவடிககை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருதனார்மட சந்தை கொத்தணியை தொடர்ந்து, வடக்கில் சந்தைகள் பூட்டப்பட்டன. அண்மையில் அவை மீள திறந்த நிலையில், அச்சுவேலி சந்தையில் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.



















