இலங்கையில் 5:1 என்ற விகிதத்தில் பெண்கள் செயன்முறையற்ற புகைத்தலுக்கு உள்ளாவதாக புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.
பெண்கள் நேரடியாக புகைப்பிடிக்காவிடினும் புகைப்பிடிப்பவர்களின் பக்கத்திலிருந்து அந்த புகையை உட் சுவாசிப்பதன் மூலம் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக அவர் விளக்கமளித்திருந்தார்.