கரீபியன் தீவுகளில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையானது இந்தியாவின் ஒரு மாநிலம் என நினைப்பதாக பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
கரீபியன் தீவு நாடுகளில் இலங்கையின் அடையாளத்தை உறுதிப்படுத்த மேற்கொள்ளும் ராஜதந்திர நடவடிக்கைகள் குறைவாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
17 கரீபியன் தீவு நாடுகளுக்கு ஒரு தூதுவர் மாத்திரமே உள்ளார்.
இவ்வறான நிலைமையில் கரீபியன் தீவு நாடுகளில் இலங்கை தொடர்பான விம்பத்தை கட்டியெழுப்புவது சிரமமானது எனவும் பிரதீபா மஹாநாமஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.