அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக கூறப்படும் திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் காடுகளை அழித்து வருவதாகப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இதனை உடனடியாக நிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று அரச அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
பல்வேறு தரப்பினர் அரசாங்கத்துடன் தொடர்புள்ளவர்கள் எனக் காட்டிக்கொண்டு தவறான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு இடமளிக்க முடியாது.
சுற்றுச்சூழல் மற்றும் காடு அழிப்புகள் அதிகளவில் நடந்து வருகின்றன. பாதுகாப்பு தரப்பினர் இதனைத் தடுக்க முயற்சித்தாலும் அரச அதிகாரிகள் சிலர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் எனவும் கமல் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.