தனது தாயின் தூக்குதண்டனையை ரத்து செய்யகோரி 12 வயது சிறுவன் ஜனாதிபதிக்கு கோரிக்கை வைத்துள்ளது பலரையும் உருக வைத்துள்ளது.
இந்தியாவில், தனது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரை Shabnam Ali என்பவர் கொன்றதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரின் மகன் Mohammad Taj தனது தாயை மன்னிக்குமாறு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மாமா, தயவுசெய்து என் அம்மா ஷப்னத்தை மன்னியுங்கள், என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Shabnam Ali-ஐ தூக்கிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, மகன் Mohammad Taj இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தற்போது 38 வயதாகும், Shabnam Ali அவரது குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள், மைத்துனர், உறவினர் மற்றும் 10 மாத மருமகன் என ஏழு பேரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
உத்திரப்பிரதேசத்த்தின் Amroha கிராமத்தை சேர்ந்தவர் Shabnam Ali.
இவர் சலீம் என்பவரை உயிருக்குயிராக காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர்.
ஆனால், ஷப்னம் வீட்டில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.
இதனால் மனம் உடைந்த இவர்கள், தங்களுக்கு எதிராக இருந்த மொத்த பேரையும் கொலை செய்ய முடிவு செய்தனர்.
அதன் படி, கடந்த 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் திகதி தன்னுடைய மொத்த குடும்பத்தையும் ஷப்னம் கொலை செய்துவிட்டு, பிறகு, பொலிசாரிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக, தன்னுடைய வீடு, அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டதாக கூறினார்.
ஆனால், பொலிசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் ஷப்னம் சிக்கிக் கொண்டார். இதையடுத்து கடந்த 2010-ஆம் ஆண்டு Shabnam Ali குற்றவாளியாக அறிவிக்க்கப்பட்டார். பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த மரண தண்டனையை ரத்து செய்ய கோரி, ஜனாதிபதியிடம் கருணை மனு கோரியிருந்தது. ஆனால், அவருடைய மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தான், அவரது மகன் தனது தாயின் மரண தண்டனையை ரத்து செய்ய கோரி வீடியோ வெளியிட்டுள்ளார்.
மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டபோது ஷப்னம் கர்ப்பமாக இருந்தார். இதில் அவரது காதலன் சலீமும் உடன் இருந்ததால், அவரும் குற்றவாளியானார்.
இதையடுத்து ஷப்னமுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைகள் ஆறு வருடங்களுக்கு அப்பால் சிறையில் இருக்க முடியாது என்பதால் மகனான Mohammad Taj வளர்ப்பு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தற்போது 12 வயதாக அவர், நான் என் தாயை சந்திக்கும் போதெல்லாம், என்னைக் கட்டிப்பிடித்து, ‘நீ எப்படி இருக்கிறாய்? நீ என்ன செய்கிறாய்? உன் பள்ளி எப்போது திறக்கிறது? உங்கள் படிப்பு எவ்வாறு முன்னேறுகிறது? உங்கள் வளர்ப்பு தந்தையையும் தாயையும் நீங்கள் தொந்தரவு செய்ய மாட்டீர்கள், தானே? என்று கேட்பார் என வேதனையுடன் கூறியுள்ளார்.
இந்தியாவில் முதன் முறையாக பெண் ஒருவர் தூக்கிலிடப்படுவது இது தான் முதல் முறையாம். இந்தியாவில் ஒரே பெண் மரணதண்டனை அறை தான் இருக்கிறதாம். இதுவரை அப்படி யாருமே இங்கு தூக்கிலிடப்படவில்லையாம்.
அதுமட்டுமின்றி, இந்த அறை 1870-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டியிருக்கிறார்கள். மதுரா சிறைக்குள்ளே இந்த அறை இருக்கிறது.
இந்த தூக்கு தண்டனை அறை பற்றி அவ்வளவாக குறிப்புகளும் எங்கும் காணப்படவில்லை. 1956-ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச சிறையில், இருந்த ஒரு கையேட்டில் மட்டும் இதை பற்றிய விவரம் உள்ளதாம்.