நடிகை குஷ்பு, முன்பு நான் உங்களைப் பற்றி ஏதேனும் பேசியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக நடிகை போட்டியிடுவார் என, பேச்சு ஓடுகிறது.
கட்சிக்கு புதிதாக வந்தவர் என்பதால், தேசிய தலைவர்கள் அனைவரிடமும் பழக்கமாக முயன்று வருகிறார்.
Held very important meeting with #ChepaukTriplicane in-charge constituency #BJP District president, mandal presidents, karyakartas,booth workers and women. Nothing is and will be possible without their support. #UnitedWeStand. #BJP4ChepaukTriplicane @BJP4TamilNadu @CTRavi_BJP pic.twitter.com/dB9wSi5qdF
— KhushbuSundar ❤️ (@khushsundar) February 27, 2021
இதில், என்ன சிக்கல் என்றால், முன்பு வேறு கட்சிகளில் இருந்தபோது, சமூக ஊடகத்தில், பா.ஜ., தலைவர்களை அவர் விமர்சனம் செய்திருக்கிறார். அதில், பெரும்பாலும் கிண்டல் இருக்கும்.
எனவே, அப்படியான தலைவர்களை சந்தித்து, மன்னிப்பு சொல்லி சமாதானம் செய்ய விரும்புகிறார். அந்த வகையில், அவர் சமீபத்தில் சந்தித்த தலைவர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். சென்னை வந்த நிர்மலாவை சென்று பார்த்தார்.
இந்நிலையில், இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மேம் உங்களை, டுவிட்டரில் பல முறை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். அதெல்லாம், அரசியல் ரீதியில் சொன்ன கருத்துதான். தனிப்பட்ட கசப்பு எதுவும் கிடையாது. உங்களையும் அப்படி விமர்சித்ததற்காக வருந்துகிறேன். மன்னித்துவிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
உடனே நிர்மலா சீத்தாராமானும், ஓ… அப்படியா. நான் உங்கள், டுவீட் எதையும் இதுவரை பார்த்ததே இல்லை. பரவாயில்லை. அரசியல் என்றால் அப்படித்தானே. டேக் இட் ஈஸி என்று குறிப்பிட்டுள்ளார்.