தமிழகம் திரும்பிய சசிகலா அமைதியாக இருக்கிறார் என்று பார்த்தால், அவர் அமைதியாக இருந்து கொண்டு, அதிமுகவில் இருக்கும் புள்ளிகளை தன் பக்கம் இழுத்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா தண்டனை காலம் முடிந்த பின் தமிழகம் திரும்பினார்.
தமிழகம் திரும்பிய அவர் அமைதியாகவே இருந்தார். இதனால், சசிகலா அதிமுக பக்கம் வரமாட்டார், அவர் வேறு அதிமுக வேறு என்றெல்லாம் கூறப்பட்டது.
இந்நிலையில், ஜெயலலிதா பிறந்தநாள் அன்று ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்திய சசிகலா, உண்மை தொண்டர்கள் இந்த ஆட்சி நீடிக்க பாடுபட வேண்டும் என பேசினார் சசிகலா. அந்த பேச்சு முடிந்ததிற்குப் பிறகு சசிகலா சந்தித்த முதல் நபர் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார்.
அதன்பிறகு, திரை உலகை சேர்ந்த பாரதிராஜா, அமீர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் சந்தித்தனர்.
சசிகலாவை சந்தித்த அனைவரும், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறினாலும், இதில் ஒரு அரசியல் பின்னணி இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் இருக்கிறோம் என சரத்குமாரும், சரத்குமார் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறார் என ஜெயக்குமாரும் சொல்லிவந்தனர்.
இந்நிலையில் திடீரென நேற்று ச.ம.க.வும் பாரிவேந்தரின் ஐ.ஜே.கே.வும் கூட்டணி அமைத்தனர்.
இவர்கள், இன்று காலை கமலையும் சந்தித்தனர். இதன் பின்னணியில், சசிகலா இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியிலிருந்த ஒருவரை உடைத்து சசிகலா, திசைதிருப்பி ஒரு புதிய கூட்டணிக்கு வழிவகுத்திருக்கிறாரா என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
சசிகலாவின் முதல் ஆட்டத்திலேயே அதிமுக கூட்டணியிலிருந்த சரத்குமார் அவுட் ஆகிவிட்டார். அடுத்தடுத்த அவுட்கள் தயாராகவே இருக்கின்றன.
அது தனியரசாகவும் இருக்கலாம், கருணாஸாகவும் இருக்கலாம். ஏனெனில் தனியரசு சசிகலாவை ஏற்கனவே சந்தித்துவிட்டார். கருணாஸ் பல இடங்களில் சசிகலாவை முன்னிலைப்படுத்திப் பேசிவருகிறார். அதனால் அடுத்தடுத்த அவுட்டகள் அவர்களாகவும் இருக்கலாம்.
அதிமுக கூட்டணியிலிருந்து ஒருவரை முதலில் உடைத்து இழுத்த சசிகலாவின் இந்த மூவ், எடப்பாடிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்த அதிர்ச்சிகளை சசிகலா தர தயாராகவே இருக்கிறார். அடுத்து என்ன அதிர்ச்சி கொடுக்கப்போகிறார் என்பதுதான் தெரியவில்லை
இதே அதிமுக கூட்டணியில் இருக்கும் தனியரசும் சசிகலாவை சந்தித்திருக்கிறார். இதனால், அவரும் அதிமுக கூட்டணியிலிருந்து விலகலாம், கருணாஸும் விலகலாம், ஏற்கனவே தமீமுன் அன்சாரி அதிமுக கூட்டணியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.