பிரான்சில் பெண் ஒருவர் தன் வீட்டில் கஞ்சா தோட்டம் வளர்த்து வந்த நிலையில், அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
பிரான்சின், Pontarlier-(Doubs) எனும் சிறு கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் திகதி (வியாழக்கிழமை) உள்ளூர் காவல்நிலையத்துக்குச் சென்ற 12 வயது சிறுவன் ஒருவன், காவல்துறையினருக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளான்.
அதன் பின், அவர்களை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
ஊரடங்கிற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், மாலை 5.30 மணி அளவில், அவனது வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் அங்கு அவனது வீட்டில் கஞ்சா தோட்டம் இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குறித்த சிறுவன் இது எல்லாம் என்னுடைய தாய் தான் என்று அவர் கூற, சுமார் 31 வயது மதிக்கத்தக்க அந்த சிறுவனின் தாயாரை பொலிசார் உடனடியாக கைது செய்தனர்.
அதன் பின் பொலிசார் சோதனை மேற்கொண்ட போது, தோட்டத்தில் 11 கஞ்சா செடிகளும், தாயின் அறைக்குள் 1.38 கிலோ எடைகொண்ட உலர்ந்த கஞ்சா செடிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன் தாயார் இப்படி வீட்டில் கஞ்சா வளர்ப்பதை அறிந்த சிறுவன் பொலிசாருக்கு தெரிவித்த தகவல் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.