சீனாவின் Xinjiang மாகாணத்தில் திடீரென்று உருவான அதிவேக காற்றில் சிக்கி போலீஸ் அதிகாரி ஒருவர் தடுமாறி கிழே விழும் வீடியோ வெளியாகி உள்ளது.
Xiaocaohu கிராமத்தில் நடந்த விபத்து குறித்து விசாரிப்பதற்காக அந்த காவல் அதிகாரி அதிகாரி அதிகாலை 3 மணி அளவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அதிவேக காற்று அடிக்க ஆரம்பித்தது.
இதனால் அந்த அதிகாரியால் மேற்கொண்டு ஒரு அடி கூட நடக்க முடியாமல் தட்டுத் தடுமாறி சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த அதிகாரி அப்படியே காற்றில் தூக்கி வீசப்பட்டார். அந்த சமயம் வினாடிக்கு 42 மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.