யாழ்ப்பாணத்தின் நிலாவரை, புத்தூர் – இராசபாதை வீதியில் நபரொருவர் நேற்றிரவு தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலுக்கு இலக்காகிய தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சந்தேநபரை அச்சுவேலி பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















