நாட்டில் மேலும் 192 பேர் கொவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 83,434 ஆக உயர்வடைந்துள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 475 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 79, 422 பேராக உயர்வடைந்துள்ளது.



















