இலங்கை கிரிக்கட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க, விளையாட்டுத்துறை முறைகேடுகள் விசேட விசாரணைப்பிரிவில் முன்னிலையானார்.
லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கட் தொடரில் ஆட்ட நிரணய சதி முயற்சியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அந்த பிரிவில் முன்னிலையானார்.
இந்த குற்றச்சாட்டின்கீழ் தாம் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் முன்பிணை கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவை நேற்று நீதிமன்றம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.