நாட்டில் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களில் அதிகளவானோர் இரத்தினபுரி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
கொவிட் 19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் 72 கொவிட் 19 நோயாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையில், இதுவரை அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 526 ஆக பதிவாகியுள்ளது.
அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய நாளில் 63 கொவிட் 19 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் பதிவான கொவிட் 19 நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆயிரத்து 856 ஆக உயர்வடைந்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 57 பேரும், கண்டியில் 21 பேரும், காலியில் 29 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 14 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதுதவிர, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், மாத்தளை, நுவரெலியா, பதுளை, களுத்துறை, பொலனறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் 10 ற்கும் குறைவான கொவிட் 19 நோயாளர்கள் பதிவானதாக கொவிட் 19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.