மியன்மார் இராணுவம் மீதும், அதன் பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
பர்மாவின் இராணுவம் பொருளாதார ரீதியான பயன்களை அடையக்கூடாது என்பதற்காக இத்தடை விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமைதியான போராட்டங்களை இராணுவத்தினர் அனுமதிக்காத நிலையில் இருதரப்பு யுத்தம் ஏற்படக்கூடிய சூழல் உருவாகும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
மியன்மாரில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத்திடமிருந்து ஜனநாயகத்தை மீட்க போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், புதன்கிழமை ஒரேநாளில் அந்நாட்டு இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.
கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மியன்மாரில் ஆட்சியைக் இராணுவம் கைப்பற்றியதிலிருந்து நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கமும், வெகுமக்கள் போராட்டமும் நடந்துவருகிறது.
இராணுவ சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும், ஆங் சாங் சூகி உள்ளிட்ட தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்துகிறார்கள்.