குடிபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொள்ள பொலிசார் தீர்மானித்துள்ளனர்.
தற்போது தினந்தோறும் இடம்பெறுகின்ற வாகன விபத்துக்களின் அதிகரிப்பைத் தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்றைய தினம் கடந்த 24 மணித்தியாலங்களில் 13 வாகன விபத்து உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வாகன விபத்துக்கள் அதிகமாக இடம்பெறுவது டிசம்பர் 20 முதல் ஜனவரி 5 வரையிலான காலப்பகுதி மற்றும் ஏப்ரல் 10 முதல் 20 வரையிலான காலப்பகுதிகளில் ஆகும்.
இதற்கமைவாக எதிர்வரும் புதுவருடத்தை கருத்திற்கொண்டு குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொள்வதற்கு பொலிசார் தீர்மானித்துள்ளனர்.
மேலும், குடிபோதையில் வாகனங்கள் செலுத்துவோரை பரிசோதிக்க அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் மேலதிக கருவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.