தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தனது மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு பெண்கள் தின வாழ்த்து கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக தனது துடுப்பாட்டம் மூலம், விக்கெட் கீப்பிங் மூலம் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளவர் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்.
இவர் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார்.
தினேஷ் கார்த்திக் கடந்த 2007ஆம் ஆண்டு நிகிதா என்ற பெண்ணை மணந்த நிலையில் 2012ல் அவரை பிரிந்தார்.
பின்னர் கடந்த 2015ல் பிரபல ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை தீபிகா பல்லிக்கல்லை மணந்தார்.
இந்த நிலையில் உலக பெண்கள் தினமான நேற்று மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், நீங்கள் வலுவான, தைரியமான மற்றும் கடுமையான பெண் என்று சொல்லும்போது, நான் அவளைப் பற்றி நினைக்கிறேன்.
அத்தகைய சக்திவாய்ந்த பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
When you say strong, bold and fierce woman, it's her who I think about! Happy Women's day to all such powerful women… you all make this world a better place!#WomensDay pic.twitter.com/Nn60PsS1Co
— DK (@DineshKarthik) March 8, 2021