இந்திய டெஸ்ட் வரலாற்றில் அதிக டெஸ்டுகளுக்குத் தலைமை தாங்கியவர்கள் என்கிற பெருமை கோஹ்லி மற்றும் டோனி வசம் உள்ளது.
இருவரும் 60 டெஸ்டுகளுக்கு அணித்தலைவர்களாகப் பணியாற்றியுள்ளார்கள். இருப்பினும் டோனியை விடவும் கோஹ்லி அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
டோனிக்கு 27 வெற்றிகள், கோஹ்லிக்கு 36 வெற்றிகள். இதன்மூலம் இந்திய கிரிக்கெட்டில் தன்னை ஒரு மகத்தான அணித்தலைவராகவும் நிரூபித்துள்ளார் கோஹ்லி.
ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த அணித்தலைவராகவும் இருப்பது இந்திய அணிக்குப் பெரிய பலமாக உள்ளது. அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி அடுத்ததாக சொந்த மண்ணில் இங்கிலாந்தையும் தோற்கடித்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
இனி வரும் காலங்களில் ஒரு அணித்தலைவராக மேலும் பல சாதனைகளை கோஹ்லி நிகழ்த்துவார் என்றே கிரிக்கெட் உலகம் எதிர்பார்க்கிறது.