சுவிஸ் எல்லையிலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் இத்தாலிய கிராமம் ஒன்றில், அபூர்வ வகை கொரோனா வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் ஏற்கனவே கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டு வருவதால் அதிகாரிகள் கவலையடைந்துள்ளார்கள்.
ஐரோப்பாவிலேயே பிரித்தானியாவுக்கு அடுத்து இத்தாலியில்தான் அதிக அளவில் கொரோனா மரணங்கள் காணப்படுகின்றன.
பிரித்தானியாவில் இதுவரை 124,000 பேரும், இத்தாலியில் 100,000 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள்.
இப்போது சுவிஸ் எல்லைக்கருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அபூர்வ வகை கொரோனா வைரஸ், இதற்கு முன் தாய்லாந்தில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த அபூர்வ வகை கொரோனா வைரஸ் தாக்கிய நபர் சமீபத்தில்தான் எகிப்திலிருந்து வந்துள்ளதாக கருதப்படுகிறது.
கடந்த 3 நாட்களில் சுவிட்சர்லாந்தில் 2,744 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, 16 பேர் உயிரிழந்துள்ளார்கள்.