சரும பிரச்சனைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்க கூடியதாகும்.
அதில் முக்கியமான ஒன்று தான் சருமத்தில் வரும் மருக்கள் பிரச்சனை
.இந்த மருக்கள் உங்களது அழகினை குறைத்து காட்டும். உடல் பகுதிகளில் மருக்கள் இருந்தால் கூட பரவாயில்லை.. அதுவே முகத்தில் இருந்தால், உங்களது முகத்தின் தோற்றத்தையே இந்த மருக்கள் மாற்றி காட்டும்.
இதனை எளிய முறையில் கூட போக்க முடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
- முதலில் 1 டீ ஸ்பூன் ஆளி விதைகளை எடுத்து மென்மையான பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். அதனுடன் 1/2 டீ ஸ்பூன் ஆளி விதை எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து கொள்ளுங்கள். ஒரு காட்டன் பஞ்சை எடுத்து அதில் இந்த எண்ணெய்யை தொட்டு மருக்களின் மீது வைக்கவும். இதை 1 மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். வாரத்திற்கு 3 முறை செய்து வாருங்கள். மருக்கள் அப்படியே உதிர்ந்து போய் விடும்.
- ஒரு மீடிய வடிவ அன்னாசி பழத்தை எடு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பிறகு அதைக் கொண்டு ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.அன்னாசி பழ ஜூஸை ஒரு டப்பாக்களில் அடைத்து ஒரு வாரத்திற்கு வையுங்கள். ஒரு காட்டன் பஞ்சை எடுத்து அன்னாசி பழ ஜூஸில் தொட்டு மருக்கள் உள்ள இடத்தில் வையுங்கள். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை இதை செய்து வாருங்கள்.
- 1/2 கப் நீருடன் 1/2 கப் ஆப்பிள் சிடார் வினிகர் சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வர வேண்டும். படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ஒரு காட்டன் பஞ்சில் நனைத்து அதை மருக்களின் மீது தடவுங்கள். பிறகு அதன் மேல் ஒரு பேன்ட்டேஜ் போட்டு இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள்.
- காலையில் எழுந்ததும் சில தேங்காய் எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்வது மருக்களை நீக்க உதவி செய்யும். இதை தினமும் அல்லது அந்த மருக்கள் கீழே விழும் வரை செய்யவும்.
- வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். இதை ஒரு மிக்ஸியில் போட்டு சில டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு காட்டன் பஞ்சை எடுத்து நனைத்து அதி மருக்களின் வைத்து தடவுங்கள். பிறகு அதை வெதுவெதுப்பான நீர் கொண்டு 30 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இந்த முறையை தினமும் ஒரு வாரத்திற்கு பயன்படுத்தி வாருங்கள். மருக்களை நீங்கள் நீக்க முடியும்.
- ஒரு கைப்பிடி அளவு முந்திரி பருப்பை எடுத்து இரவில் நீரில் ஊற வைத்து விடுங்கள். பிறகு காலையில் அதை மிக்சியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை பிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தி வாருங்கள். இந்த பேஸ்ட்டை மருக்களின் தடவி ஒரு மணி நேரம் வரை காய வைக்கவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை என சில நாட்களுக்கு நீங்கள் செய்து வரலாம்