20 கிராம் ஹெரோயின் மற்றும் உந்துருளி ஒன்றுடன் 60 வயது பெண் ஒருவர் காலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காலி-ரத்கம பகுதியை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பில் காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபரை இன்று காலி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.