யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் மேலும் 2 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில் ஒருவர் கிளிநொச்சியையும் மற்றையவர் பதுளையும் சேர்ந்தவர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட 319 பி.சீ.ஆர் பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மட்டகளப்பு மாவட்டத்தில் இதுவரையில் 809 பேருக்கு கொவிட்-19 தொற்றறுதியாகியுள்ளாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் குறிப்பிட்டார்.



















