கனடாவில் 7 வயது சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 30 வயது இளம்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஒன்றாறியோவில் தான் இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்துள்ளது.
அன்றைய தினம் காலை 7 மணியளவில் 7 வயது சிறுமி கடத்தி செல்லப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆம்பர் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் சிறுமி ரொறன்ரோவில் உள்ள ஒரு இடத்தில் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிறுமியை கடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் 30 வயதான பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
16 வயதிற்கு உட்பட்ட ஒருவரை கடத்தி சென்றதாக அப்பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.