நாம் தமிழர் ஆட்சியில் தமிழ்நாட்டில் நிர்வாகம் மற்றும் கல்வியில் என்ன கொள்கை பின்பற்றப்படும் என்பதை சீமான் விளக்கியுள்ளார்.
ஏப்ரல் 6ம் திகதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளான அதிமுக-திமுக தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை சமீபத்தில் வெளியிட்டன.
திமுக அறிக்கையில் மதுவிலக்கு குறித்து எந்த அறிவிப்பும் இல்லாததும், ஆட்சியில் இருக்கும் அதிமுக தற்போது பெட்ரோல் விலைகளை குறைக்காமல், அதை தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளதாம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலுக்கு தேர்தல் அறிக்கையை வெளியிடாத மாற்றத்திற்கான நாம் தமிழர் கட்சி, ஆட்சி வரைவை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அமையவிருக்கும் நாம் தமிழர் ஆட்சியில் டென்மார்க் நாட்டைப் போன்ற ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகம், தென்கொரிய நாட்டைப் போன்ற சரியான சமமான தரமான அனைவருக்குமான இலவசக் கல்வி வழங்கப்படும் என சீமான் உறுதியளித்துள்ளார்.
ஊழல் மிகவும் குறைவாக உள்ள நாடு டென்மார்க் அதற்குக் காரணம் வெளிப்படையான நிர்வாகம். அந்தமாதிரிதான் நாங்கள் தமிழகத்திலும் வெளிப்படையான நிர்வாகத்தைக் கொடுக்க விரும்புகிறோம்.
கல்வியில் சிறந்த நாடு தென்கொரியா, அந்த நாட்டைத் தாண்டி தமிழகத்தின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும், நாம் தமிழர் ஆட்சியில் சரியான சமமான தரமான கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என சீமான் உறுதியளித்துள்ளார்.